ஒப்பீடு

ஒப்பீடு......

உலகில் பிறந்த அனைவரும் தனித்துவமானவர்கள்.ஒரே கருவில் பிறந்த இரட்டையர்களாக இருந்தாலும் சரியே...personal individuality  ஆளாளுக்கு வித்தியாசப்படும்.
ஒரு மனிதனின் தனித்தன்மை இறை படைப்பின் ஒரு அதிசயம்.

சிலர் அழகாக இருப்பார்கள்.
சிலர் நல்ல நிறமாக இருப்பார்கள்.
சிலர் கருப்பாக இருப்பார்கள்..

படிப்பில் கெட்டித்தனமான சிலர்...
படிப்பே வராத சிலர்...
தாரளதன்மையாக சிலர்...
சிக்கனமாக சிலர்.....

அழகாக இருப்பவர்கள் எல்லாம் வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் இல்லை...
கருப்பாக இருக்கும் எல்லோரும் முட்டாள்கள் இல்லை..
பணக்காரர்களாக இருப்பவர்கள் எல்லோரும் தாராள மனம் கொண்டவர்கள் இல்லை...
ஏழைகள் எல்லோரும் கஞ்சர்கள் இல்லை..
நன்றாக படித்தால் தான் வாழ முடியும் என்றில்லை...
படிப்பு வராத எவரும் இறக்க வேண்டும் என்றில்லை....

நிறத்திற்கும் அழகிற்கும் முடிச்சுகள் போட்டது நாங்கள் தான்...
அழகை நல்லவர்கள் என்றும் அசிங்கத்தை வில்லன்கள் என்றும் சினிமாவை பார்த்து தொடர்பு பண்ணியதும் நாங்கள் தான்...
பாடசாலை படிப்பு வரவில்லை என்பதற்காக அறிவே இல்லை என்று சொன்னதும் நாங்கள்....

பெற்றார்களே....இல்லாத ஒன்றை உங்க பிள்ளைகளிடம் தேடாமல்  அவர்களிடம் இருப்பதை கண்டுபிடித்து பட்டை தீட்டுங்களேன்....

ஊரார் பெண்களை பார்த்து வியந்து அவளை போல நீ இல்லையே என்று மனைவிமார்களை குறைப்படாது அவளிடம் இருக்கும் நல்லதை கண்டு ரசியுங்களேன்....

உபதேசிக்கிறோம் என்ற பெயரில் வந்திருக்கும் சபையினரை பார்த்து "பிலகேட்ஸை பார்த்தீர்களா....ஆபிரகாம் லிங்கனை பார்த்தீர்களா...அவர்களை போல நீங்களில்லை.உங்கள் வாரிசுகளை அந்த ஐன்ஸ்டீன் போல வளர்க்கவில்லை.நியூட்டன் போல யோசிக்க சொல்லிக்கொடுக்கவில்லை.. " என்று யாராருக்கோ ஒப்பீடு செய்யாமல் பெரிய மனது பண்ணி  கொஞ்சம் பாரட்டுங்களேன்.....

அப்படியே ஒப்பிட வேண்டுமாக இருந்தால் அண்ணாலருடன் ஒப்பிடுங்கள்....அவர் வழி வாழ்ந்த அவர் தோழர்களோடு ஒப்பிடுங்கள்...பிரயோசனமாக இருக்கும்...

தேவையற்ற ஒப்பீட்டை எப்போது நிறுத்துகின்றோமோ அப்போதே வாழ்வு அழகாகும்...

~ஷாமிலா அப்துல் காதிர்~

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாதிக்கப்பிறந்தவள்

ஆதலினால் காதல் செய்வீர்!!!!!     (நிபந்தனை உண்டு)