மூன்றாம்நபர் தலையீடு - குடும்ப உறவிற்கு சாபக்கேடு!!

மூன்றாம்நபர் தலையீடு - குடும்ப உறவிற்கு சாபக்கேடு!!

இல்லற வாழ்க்கையாக இருக்கட்டும்,குடும்ப உறவாக இருக்கட்டும்,அண்டை அயலார் நேசமாக இருக்கட்டும்,நட்பாக இருக்கட்டும் ....இவை எல்லாம் மனதும் மனதும் இணைந்து வரும் பந்தம்....பொருள்,பணம்,அந்தஸ்து இவை எல்லாவற்றையும் தாண்டி தொடர்ந்து செல்லும் முடிவில்லா ஒரு பயணம்...

இந்த அழகிய பயணத்தில் ஏகப்பட்ட பிரச்சனை வரலாம்...பல உருவங்களில் வரலாம்..அதில் கேவலமான ஒரு ஒரு பிரச்சனை" மூன்றாம் நபர் தலையீடு". (Third person interference)..

தனக்கு சார்பாக யார் பேசுகிறார்களோ அவர்களிடம் தனது கவலைகளை,பிரச்னைகளை பகிர்ந்து கொள்வது மனித இயல்பு...ஆனால்,அது தான் அந்த பிரச்னையை பெரிதாக்கும் என்பது கடைசி வரை தெரியாது.அவ்வாறு தமது பிரச்சனையை பலரிடம் சொல்லிவிட்டு ,மறுபடி குறித்த உறவோடு உறவு சேர எப்படி முடியும்."நேற்று வரை அவரை பற்றி எவ்வாறெல்லாம் பேசினாய்..இன்று அவரோடு உறவு சேர்ந்து விட்டாயோ" என கூறிவிடுவார்களே என்ற தர்மசங்கட சூழலிலேயே வாழவேண்டி வரும்.

இரு நபருக்கு இடையில் வரும் பிரச்னையை இருவருக்கும் பொதுவாக யார் பேசுவார்களோ,இரு சாரார் பற்றியும் யார் நல்ல அபிப்ராயம் கொண்டிருப்பார்களோ அவர்களிடமே முன்வைக்க வேண்டும்..அப்போது பிரச்சனைக்குரிய  இரண்டு நபர்களினதும் நல்லது,கேட்டது இரண்டுமே சரி சரிசமனாக பார்க்கப்படும்.. பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்படும்.

உறவுகளில் பிரச்சனை எப்போது வருகிறது தெரியுமா?"அந்த உறவு நிலைத்திருக்க வேண்டும் என்கிற போது தான்"...

எனவே,உங்கள் பிரச்சனைக்கு,கவலைகளுக்கு ஆறுதல் தேடி நீங்கள் ஒரு மூன்றாம் நபரை தெரிவு செய்யும் போது கொஞ்சம் கவனமாக இருக்கலாமே....

~ஷாமிலா அப்துல் காதிர்~

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாதிக்கப்பிறந்தவள்

ஒப்பீடு

ஆதலினால் காதல் செய்வீர்!!!!!     (நிபந்தனை உண்டு)