~சிலந்தியும் சிலந்தி வலையும்~
~சிலந்தியும் சிலந்தி வலையும்~
சிலந்தி வலைக்கு நிகராய் பிண்ணப்பட்ட பிரச்சனைகளோ ஏராளம்..அதில் விழாதவர்கள் யாருமே இல்லை...நடுவில் வீற்றிருக்கும் சிலந்தியை போல பல தலையீட்டாளர்கள்...அவர்களுள் சிலர் அந்த பிரச்சனையை கட்டுப்படுத்த முயல்வார்கள்..அவர்களுள் பலர் அந்த பிரச்சனையை உருவாக்கி இருப்பார்கள் அல்லது அந்த பிரச்சனையை தீர்க்க விடாது வம்பளப்பார்கள்...
பிரச்சனை என்னும் அந்த வலையில் சிக்கித் தவிக்கும் ஒவ்வொருவரும் ஒரு சிலந்தியை சந்தித்தே ஆக வேண்டும்...
அந்த சிலந்தி உதவி செய்யுமா?அல்லது உள்ளதை பெரிதாக்குமா?அல்லது புதிதாக பிரச்சனையை உருவாக்குமா என்பது பிரச்சனை முடியும் வரை தெரியாது....ஆனால்
நாம் ஒரு வலையில் "சிலந்தியாக" இருக்கும் பொழுது பிரச்சனை என்னும் வலையில் சிக்கியவர்களை அதில் இருந்து தூக்கி விடும் helpful சிலந்தியாக இருக்கலாமே....
இன்றைக்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில் நிறைய சிலந்திகள்...சரியாக கற்காமல்,முறையாக பயிற்சி எடுக்காமல் உதவப்போய் "சொதப்பல்"மன்னர்களாய் இருக்கிறார்கள்...பிறர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று அவசர குடுக்கைகளாய் உருளுகிறார்கள்...
ஆர்வக்கோளாறு சிலந்திகளே!!கவனத்தில் கொள்க!!!மனிதர்கள் எவரும் பரிசோதனை எலிகள் இல்லை....பிரச்சனை வலையில் விழும் வரை அவர்களும் வண்ணத்துப்பூச்சிகளாய் வலம் வந்தவர்கள் தான்.....counseling என்ற பெயரில் நீங்கள் பயிற்சி எடுக்க இது விளையாட்டு மைதானம் கிடையாது...
நினைவில் கொள்க!!!
அரைகுறையாய் செய்வதை விட செய்யாமலே இருக்கலாம்..."உதவி" என்பது வெறும் வார்த்தை கிடையாது..
என்னைப்பொருத்த வரையில் " உதவி " என்பது" பரிபூரணமானஒரு செயல்".
~ஷாமிலா அப்துல் காதர்~
கருத்துகள்
கருத்துரையிடுக